தேசிய செய்திகள்

இந்திரா காந்தி பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழஞ்சலி + "||" + Tributes to former PM #IndiraGandhi on her birth anniversary: Prime Minister Narendra Modi

இந்திரா காந்தி பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழஞ்சலி

இந்திரா காந்தி பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழஞ்சலி
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
புதுடெல்லி.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் சக்தி ஸ்தலா எனுமிடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும், நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் இந்திரா காந்தியின் பிறந்தநாளை கட்சியினரும் தொண்டர்களும் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்திரா காந்தி அவர்களுக்கு எனது புகழஞ்சலிகள்" என்று கூறியுள்ளார்.
Related Tags :