தேசிய செய்திகள்

ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமான ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் + "||" + Russia says India to produce 100 million doses of Sputnik vaccine

ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமான ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்

ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமான ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பூட்னிக் வி உற்பத்தியைத் தொடங்க உத்தேசித்துள்ளன.
புதுடெல்லி: 

உலக அளவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், தடுப்பூசி ஒன்று தான் இதனை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வு என அனைவரும் இதை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.

ஆகஸ்ட் 11 அன்று ரஷியா கொரோனா வைரசு க்கு எதிரான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு என்று அறிவித்தது. ஸ்பூட்னிக் வி என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியது. இரண்டு மாதங்களாக மேற்கொண்ட மனித பரிசோதனைக்கு பின்னர் ரஷியா இந்த தடுப்பூசியை பதிவு செய்து உள்ளது.

ரஷியாவின்  ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் இந்திய மருந்து நிறுவனமான ஹெட்டெரோ  ஆகியவை இணைந்து இந்தியாவில் ஸ்பூட்னிக் வி கோவிட் -19 தடுப்பூசியை ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமான அளவை உற்பத்தி செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக ஆர்.டி.ஐ.எஃப்  RDIF ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பூட்னிக் வி உற்பத்தியைத் தொடங்க உத்தேசித்துள்ளன.

ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமான ஸ்பூட்னிக் வி  கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்.

தற்போது, மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. அவை பெலாரஸ், ஐக்கிய அரபு அமீரகம், வெனிசுலா மற்றும் பிற நாடுகளில் நடந்து வருகின்றன. இரண்டாம் கட்ட சோதனைகள் இந்தியாவில் நடைபெற்று வருவதாக ஆர்.டி.ஐ.எஃப் கூறியுள்ளது.