மாவட்ட செய்திகள்

கியாஸ் கசிவால் தீ விபத்து கோவிலில் பிரசாதம் தயாரித்த பூசாரி உடல் கருகி சாவு... + "||" + Fire accident due to gas leak Made offerings in the temple Priest's body charred to death

கியாஸ் கசிவால் தீ விபத்து கோவிலில் பிரசாதம் தயாரித்த பூசாரி உடல் கருகி சாவு...

கியாஸ் கசிவால் தீ விபத்து கோவிலில் பிரசாதம் தயாரித்த பூசாரி உடல் கருகி சாவு...
கியாஸ் கசிவால் தீ விபத்து கோவிலில் பிரசாதம் தயாரித்த பூசாரி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
திரு.வி.க. நகர், 

சென்னை கொளத்தூர் அஞ்சுகம் தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது 59). இவர், கொளத்தூர் எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை இவர், கோவில் வளாகத்தில் உள்ள சமையல் அறையில் பிரசாதம் தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு அவரது உடலில் தீ பற்றிக்கொண்டது.

இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயமடைந்த மோகனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூசாரி மோகன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.